தற்போதைய செய்திகள்

லண்டனில் இருந்து 240 பயணிகள் நாடு திரும்பினர்

20th Aug 2020 03:36 PM

ADVERTISEMENT

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இயக்கிய முதல் சிறப்பு விமானம் லண்டனில் இருந்து 240 இந்தியர்களை அழைத்துக் கொண்டு இன்று இரவு கோவா விமான நிலையம் வருகின்றது.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெடின் சிறப்பு விமானத்தில் 240 பயணிகள் இந்தியாவிற்கு வருகின்றனர். இந்த விமானம் இந்தியாவில் உள்ள கோவா விமான நிலையத்திற்கு இன்று இரவு 11.50 மணியளவில் தரையிறங்க உள்ளது.

கோவாவில் இருந்து இந்த சிறப்பு விமானம் 89 பயணிகளுடன் லண்டனுக்கு ஆகஸ்ட் 21 மதியம் 2.30 மணியளவில் புறப்படுகிறது.

மேலும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி கனடாவுக்கு தனது இரண்டாவது நீண்ட தூர சிறப்பு விமானத்தை 357 பயணிகளுடம் தில்லியில் இருந்து கனடாவின் டொராண்டோவுக்கு இயக்குகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறுகையில், ‘ஆம்ஸ்டர்டாம், டொராண்டோ மற்றும் ரோம் ஆகிய நாடுகளுக்குப் பிறகு நான்காவது நீண்ட தூர விமான பயணமாக லண்டனில் இருந்து இயக்குகிறோம்.

எங்களது விமானங்கள் பல மாதங்களாக வெளியூர்களில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர்களை வீடு திரும்ப உதவியாக இருக்கும்’ என கூறினார்.

Tags : spicejet
ADVERTISEMENT
ADVERTISEMENT