தற்போதைய செய்திகள்

திருப்பூரில் தமுஎகச சார்பில் ஆர்ப்பாட்டம்

20th Aug 2020 02:46 PM

ADVERTISEMENT

திருப்பூர்: திருப்பூரில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணேசன் தலைமை வகித்தார். இதில், பங்கேற்றவர்கள் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும், சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலக்குழு உறுப்பினர் கோவை சதாசிவம், மாநில செயற்குழு உறுப்பினர்  ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக , பாடகர் து.சோ.பிரபாகரனின் இசைப்பாடல் நிகழ்ச்சியும், கவிஞர் பா.ராஜேஷின் கவிதை வாசிப்பும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT