தற்போதைய செய்திகள்

பஞ்சாப்: ஜூலை மாதத்திற்கு ரூ. 189.34 கோடி ஓய்வூதியம் விடுவிப்பு

14th Aug 2020 06:08 PM

ADVERTISEMENT

சண்டிகர்: பஞ்சாபில் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நிதி உதவித்திட்டத்தில்  ஜூலை மாதத்திற்கான ரூ. 189.34 கோடி ஓய்வூதியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நிதி உதவித் திட்டத்தில் 25.25 லட்சம் மக்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ. 189.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் விரைவில் பயனாளர்களின் நேரடி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பணத்தால் வயதானவர்கள், விதவை பெண்கள், ஆதரவற்ற பெண்கள், குழந்தையை சார்ந்துள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 25.25 லட்சம் மக்கள் பயன்பெற உள்ளனர்.

இதில் ரூ.127.80 கோடி பணம் 17.05 லட்சம் முதியவர்களுக்கும், ரூ.34.90 கோடி 4.65 லட்ச விதவை பெண்களுக்கும், ரூ.111.37 கோடி பணம் 1.15 லட்ச குழந்தை சார்ந்தவர்களுக்கும், ரூ.15.27 கோடி பணம் 2.04 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

ஊரடங்கால் வருவாயின்றி மக்கள் தவித்து வரும் நிலையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியத்தால் மக்கள் பயனடைவார்கள் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT