தற்போதைய செய்திகள்

20 நிமிடத்தில் கரோனா பரிசோதனை செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு

14th Aug 2020 01:04 PM

ADVERTISEMENT

 

மெல்போர்னில் கரோனா பரிசோதனையை 20 நிமிடத்தில் 100 சதவீதம் துல்லியமாக கணக்கிடும் இயந்திரம் கண்டுபிடித்துள்ளனார்.

இதுகுறித்து மெல்போர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் டிம் ஸ்டீனியர் வெளியிட்ட செய்தியில்,  

என் 1-ஸ்டாப்-லாம்ப் எனப்படும் இந்த சோதனை, சார்ஸ்-கோவ்-2 மாதிரிகளைக் பரிசோதனை செய்வதில் 100 சதவீதம் துல்லியமாக உள்ளது.

ADVERTISEMENT

இந்த இயந்திரம் சிறிய சிறிய பாகங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. கரோனா தொற்றைக் கண்டறிவதில் விரைவாகவும், துல்லியமாகவும் செயல்படுகிறது.

முன்பே பரிசோதித்த 151 மாதிரிகளை இந்த இயந்திரம் மூலம் மறுபரிசோதனைக்கு உட்படுத்தினோம்.   இதில், 87 மாதிரிகளை நேர்மறையென 100 சதவீதம் சரியாக அடையாளம் கண்டுள்ளது.

இச்சோதனையில் 93 மாதிரிகளை 14 நிமிடங்களிலும், மீதமுள்ள மாதிரிகளை 20 நிமிடத்திற்கும் குறைவாகவும் முடிவுகளை தெரிவித்தது. 

இந்த இயந்திரம் பராமரிப்பிற்கு மிகவும் எளிதாகவும், முடிவுகளை தெரிவிப்பதில் விரைவாகவும் உள்ளது. மேலும் பரிசோதனைக்கான செலவு மிகவும் குறைவாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT