தற்போதைய செய்திகள்

உ.பி. யில் நாய் கடித்ததில் சிறுவன் பலி

14th Aug 2020 01:42 PM

ADVERTISEMENT

உத்தரபிரதேச மாநிலத்தில் தோட்டத்திற்கு செல்லும் வழியில் நாய் கடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்தார்.

உத்திர பிரதேசம் மாநிலம் பிலிபிட் மாவட்டம் அருகேவுள்ள ஒரு கிராமத்தில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவன் அஷிஸ் ரஷா (வயது 10). இவர் கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த கிராமத்தில் சுற்றித்திரிந்த நாய்கள் அந்த சிறுவனை கடித்ததில் பலத்த காயமடைந்தான். சிறுவனை மீட்ட கிராம மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை ஆசித் கான் கூறுகையில், இந்த நாய்கள் முன்பே 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களை கடித்துள்ளது. கிராம மக்கள் நாய்களுக்கு எலும்புகளை கொடுத்து பழக்கியதே இதற்கு காரணம் என தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்த கிராமத்திற்கு வியழக்கிழமை வந்த வனத்துறை அதிகார்கள், அங்குள்ள நாய்களை பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத வேறு பகுதியில் விட்டனர்.  

Tags : uttar pradesh
ADVERTISEMENT
ADVERTISEMENT