தற்போதைய செய்திகள்

கேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக அதிகரிப்பு

11th Aug 2020 12:21 PM

ADVERTISEMENT

கேரளத்தில் மூணாறு நிலச்சரிவில் சிக்கி  உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக அதிகரித்துள்ளது. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலையில் கடந்த வாரம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதி தொழிலாளர்கள் முகாம்களில் தங்கியிருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பலர் நிலச்சரிவில் சிக்கினர். 

இதனைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் அப்பகுதிகளில் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நடமாடும் மருத்துவக் குழுவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று (திங்கட் கிழமை) வரை 49-ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 3 பேரின்  உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக அதிகரித்துள்ளது. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. 

ADVERTISEMENT

Tags : landslide
ADVERTISEMENT
ADVERTISEMENT