தற்போதைய செய்திகள்

முகநூல் நிறுவன உதவியால் தற்கொலை தடுத்து நிறுத்தம்

11th Aug 2020 05:01 PM

ADVERTISEMENT

முகநூலில் நேரலை ஒளிபரப்பி தற்கொலை செய்ய முயன்றவரின் தகவல்களை முகநூல் நிறுவனம் காவல்துறைக்கு தெரிவித்ததால் தற்கொலை முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

மும்பை உணவகத்தில் வேலை செய்யும் ஒருவர் முகநூலில் நேரலை ஒளிபரப்பியபடி தற்கொலை செய்ய முயற்சித்தார். முகநூலின் அயர்லாந்து அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மும்பை காவல்துறையினர் தொழில்நுட்ப உதவியுடன் அவரின் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து துணை ஆணையர் (சைபர் செல்) ராஷ்மி கரண்டிகர் கூறுகையில், தற்கொலை செய்ய முயற்சித்தவர் முகநூல் கணக்கை அவரது மனைவி எண்ணிலிருந்து தொடங்கியிருக்கிறார். அவரது மனைவி தில்லியில் இருப்பதால் முகநூல் நிறுவனம் தில்லி காவல்துறைக்கு முதலில் தகவல் கொடுத்தது.

தில்லியில் உள்ள முகவரிக்கு சென்றபோது அந்த நபர் மும்பையில் இருப்பதாக அவரின் மனைவி கூறினார். இதையடுத்து மும்பை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த நபர் இருக்கும் இடத்திற்கு சென்று தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினார்கள் என தெரிவித்தார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT