தற்போதைய செய்திகள்

உஸ்பெகிஸ்தானிலிருந்து 213 இந்தியர்கள் நாடு திரும்பினர்

11th Aug 2020 01:41 PM

ADVERTISEMENT

 

உஸ்பெகிஸ்தானில் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த 213 இந்தியர்கள் இண்டிகோ சிறப்பு விமானம் மூலம் ஆகஸ்ட் 7-ம் தேதி தில்லி வந்தடைந்தனர்.

தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தான் மற்றும் சென்ட்ரோவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் இந்த விமானம் இயக்கப்பட்டது.

இது குறித்து இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் தத்தா கூறுகையில், உஸ்பெகிஸ்தானில் இருந்து எங்கள் முதல் சிறப்பு விமானத்தில் அங்கு சிக்கித் தவித்த 213 இந்தியர்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளோம்.

ADVERTISEMENT

இண்டிகோ நிறுவனம் சர்வதேச சிறப்பு விமானங்களை இயக்க அனுமதித்தமைக்கு அரசாங்கத்திற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற கடினமான காலங்களில் நம் நாட்டு மக்கள் திரும்பி வருவதற்கு சிறப்பு விமானங்கள் உதவியாக இருக்கும்.

இது போன்ற பேரிடர் காலத்தில் நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்வோம் என கூறினார்.

Tags : Migrant
ADVERTISEMENT
ADVERTISEMENT