தற்போதைய செய்திகள்

தளர்வில்லா பொதுமுடக்கம்: போடியில் கடைகள் அடைப்பு-மக்கள் நடமாட்டம் தாராளம் 

9th Aug 2020 11:31 AM

ADVERTISEMENT


போடி: போடியில் ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா பொதுமுடக்கைத்தையொட்டி கடைகள் மூடப்பட்டிருந்தாலும்  சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லா பொதுமுடக்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து போடி நகர் மற்றும் கிராம பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே இறைச்சி வியாபாரம் களைகட்டியது. பெரும்பாலான இறைச்சி கடைகளில் காலை 5 மணி முதலே கூட்டம் காணப்பட்டது. காலை 10 மணி வரை இறைச்சி  கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

பின்னர் காலை 10 மணி வரையிலும் பொதுமக்கள் நடமாட்டம் தாராளமாக காணப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் சென்று வந்தனர். தேவர் சிலை, திருவள்ளுவர் சிலை, பழைய பேருந்து நிறுத்தம், வஞ்சி ஓடை தெரு, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலை சந்திப்புகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

போடி பகுதியில் நள்ளிரவு முதலே சாரல் மழை பெய்து வந்தாலும் மக்கள் சாலைகளில் நடப்பது அதிகம் காணப்பட்டது. மழையினால் காவல் துறையினர், சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பில் தொய்வு ஏற்பட்டது.

ADVERTISEMENT

மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள், அம்மா உணவகம் ஆகியவை மட்டும்  வழக்கம் போல் செயல்பட்டன.

Tags : Lockdown
ADVERTISEMENT
ADVERTISEMENT