தற்போதைய செய்திகள்

இலங்கைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு

6th Aug 2020 12:06 PM

ADVERTISEMENT

இலங்கையில் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்றே வெளியிடவுள்ளனர். அதற்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இது குறித்து தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா கூறுகையில்,

இலங்கையில் நேற்று நடைபெற்ற தேர்தலில் 71 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.  நாடு முழுவதும் உள்ள 64 வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மொத்தம் 3,328 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை பணிக்கு வரும் அனைத்து பணியாளர்களும் சுகாதரத் துறை அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக 8,000 சுகாதார பணியாளர்கள் சுகாதார பணியை மேற்கொள்கின்றனர் என தெரிவித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT