தற்போதைய செய்திகள்

போடியில் பலத்த சூறைக்காற்றால் வீடுகள், மின்கம்பங்கள் சேதம்: தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

6th Aug 2020 01:05 PM

ADVERTISEMENT


போடி: போடியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் வீடுகள், மின் கம்பங்கள் சேதமடைந்தன. இரவு விட்டு விட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

     போடியில் கடந்த சில நாள்களாகவே லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில் புதன்கிழமை காலை முதலே பலத்த சூறைக்காற்று வீசத் தொடங்கியது. மாலையில் சூறைக்காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. இரவு முழுவதும் சூறைக்காற்று தொடர்ந்து வீசியதில் போடி சிலமலை, சில்லமரத்துப்பட்டி, ராசிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. மணியம்பட்டி, சூலப்புரம் கிராமங்களில் பல வீடுகள் சேதமடைந்தன. 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

     போடி நகர் மற்றும் கிராமங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போடி நகர் பகுதியில் புதன் கிழமை காலை முதல் வியாழன் கிழமை காலை வரை விட்டு விட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும் விட்டு விட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், உயர்வழுத்த மின்சாரமும், தாழ்வழுத்த மின்சாரமும் என மாறி மாறி மின்விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மின்சாதன பொருட்கள் பழுதடையும் சூழல் ஏற்பட்டது.

     வியாழக்கிழமை பகலிலும் தொடர்ந்து சூறைக்காற்று வீசியதில் சூலப்புரம், சிலமலை கிராமங்களில் வீடுகளின் மேற்கூரைகள் பறந்து விழுந்தன. மரங்களும் சாய்ந்தது. இதனிடையே மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

 

Tags : strong winds
ADVERTISEMENT
ADVERTISEMENT