தற்போதைய செய்திகள்

கரோனாவுக்கு சென்னை பூந்தமல்லியில் சிறப்பு காவல் ஆய்வாளர் பலி 

6th Aug 2020 10:58 AM

ADVERTISEMENT


சென்னை: கரோனா தொற்றுக்கு குன்றத்தூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

தமிழகத்தில் பரவி வரும் கரோனா தொற்றுக்கு களத்தில் நின்று தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பாண்டி முனி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட்டார்.

இதையடுத்து, அவர் நந்தனத்தில்  உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திவீர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி  சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டி முனி உயிரிழந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT