தற்போதைய செய்திகள்

விழுப்புரம் அரசு மருத்துவர் உள்ளிட்ட இருவருக்கு கரோனா தொற்று உறுதி

29th Apr 2020 02:19 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கரோனா புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் பணியாற்றிவந்த விழுப்புரத்தை சேர்ந்த 29 வயது மருத்துவருக்கு புதன்கிழமை கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

உடனடியாக இவர் அதே அரசு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள வடக்குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மற்றொருவருக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 50 -ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT