தற்போதைய செய்திகள்

கரோனா பாதிப்பு: இத்தாலி 2 லட்சத்தை கடந்தது

29th Apr 2020 04:20 PM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 379- ஆக உயர்ந்துள்ளது. 

உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 385-ஆக உயர்ந்துள்ளது. 210 நாடுகளில் மொத்தம் 31 லட்சத்து 49 ஆயிரத்து 108-க்கும்  மேற்பட்டோர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். 9 லட்சத்து 62 ஆயிரத்து 763-க்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் கரோனா நோய்த்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இதுவரை 2 லட்சத்து ஆயிரத்து 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27,359 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 68,941 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT