தற்போதைய செய்திகள்

மாதவரம் அருகே காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி

29th Apr 2020 03:53 PM

ADVERTISEMENT


மாதவரம்: மாதவரம் அருகே காவலர் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மாதவரம் அருகே கில்பன் நகா் 2-வது தெருவைச் சோ்ந்த காவலா் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறாா். இவருடைய மனைவி மற்றும் குழந்தை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே விருதுநகருக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் தனியாக இருந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். 

இந்த நிலையில் புதன்கிழமை சென்னையில் உள்ள காவலா்களுக்கு கரோனா தொற்று குறித்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இவருக்கு கரோனா நோய்த்தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். 

மேலும் கில்பன் நகா் 2-வது தெருவில் உள்ள 18 பேரை வாகனத்தில் அழைத்து சென்று கரோனா நோய்த்தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT