தற்போதைய செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் காற்றுடன் பரவலாக மழை

26th Apr 2020 10:42 AM

ADVERTISEMENT


விழுப்புரம் நகர பகுதிகளில் தற்போது காற்றுடன் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. விழுப்புரம் திண்டிவனம் திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலான சாரல் மழை பெய்தது.

தொடர்ந்து மேகமூட்டத்துடன் விட்டுவிட்டு மழை பெய்தது. மரக்காணத்தில் சூறைக்காற்றுடன் அரை மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.

மாவட்டத்தில் கரோணா பரவல் தடுப்பதற்கான ஊரடங்கு தடை உத்தரவால், சாலைகள் வெறிச்சோடி இருந்த நிலையில், மழை பெய்தது குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT