தற்போதைய செய்திகள்

கரோனா: தமிழகத்தில் பலி 4-ஆக உயா்வு, பாதிப்பு 485-ஆக அதிகரிப்பு

5th Apr 2020 08:35 AM

ADVERTISEMENT


தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். இதனால் மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்தது. 

இந்த நிலையில் துபையில் இருந்து தமிழகம் வந்த 75 வயது முதியவர், கடந்த 3 ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு மணிநேரத்திலேயே அவர் உயிரிழந்தார். 

இதையடுத்து அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவரது பரிசோதனை முடிவில் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதையடுத்து தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே தமிழதத்தில் கரோனாவுக்கு மதுரையில் ஒருவர், சனிக்கிழமை விழுப்புரம் மற்றும் தேனியில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். 

கரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411-லிருந்து 485-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT