தற்போதைய செய்திகள்

பெரம்பலூர் அருகே தில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர் தனிமைப்படுத்தி பரிசோதனை

1st Apr 2020 02:54 PM

ADVERTISEMENT

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தில்லி மாநாட்டுக்கு சென்று வந்த இளைஞரை புதன்கிழமை கண்டறிந்த சுகாதாரத் துறையினர், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவரது சளி, ரத்தம் ஆகியவற்றை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூரைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர், திருச்சி உறையூர் ராமலிங்கம் நகரில் தங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவர், திருச்சியைச் சேர்ந்த தப்லிக் குழுவுடன் இணைந்து அண்மையில் புது தில்லி சென்று, அங்கு நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு கடந்த மார்ச் 25 ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

இவர், வி.களத்தூரில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கியிருப்பதை அறிந்த பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்து, அங்குள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். 

மேலும், இவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ளதா என்பதை அறிந்துகொள்ள, மருத்துவர்கள் இவரது சளி, ரத்தம் ஆகியவற்றை பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரது வீடு இருக்கும் பகுதியிலிருந்து 7.கி.மீ தொலைவுக்கு சுகாதாரத் துறையினர் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் வீடு, வீடாகச் சென்று யாருக்கேனும் அதிக காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை அளித்து வருவதாக துகாதாரத் துறையினர் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

Tags : Corona
ADVERTISEMENT
ADVERTISEMENT