தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் ஆட்டு கொட்டகையில் தீ: 7 ஆடுகள் சாவு

1st Apr 2020 09:44 AM

ADVERTISEMENT

 
 ஈரோடு: ஆட்டு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 ஆடுகள் உயிரிழந்தன.
ஈரோடு லோகநாதபுரம், தங்கமணி வீதியை சேர்ந்தவர்  தங்கம்மாள் (68).  இவர் அதே பகுதியில் தனது மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் ஆட்டுக கொட்டகை அமைத்து அதில் 20 ஆடுகளை வளர்த்து வந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு தூங்கச் சென்று விட்டார்.

இரவு சூரம்பட்டி போலீஸார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டு கொட்டகையில் இருந்து புகை வருவதை கண்டு, அக்கம்பக்கத்தினர் உதவியுடன்  ஆட்டு கொட்டகையில்  ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.  

மேலும்  கொட்டகையில் இருந்த சில ஆடுகளை வெளியே எடுத்து வந்தனர். எனினும் கொட்டகை  முழுவதும் எரிந்து நாசமானது.  இந்த தீ விபத்தில் 7 ஆடுகள் உயிரிழந்தன.  இவற்றின் மதிப்பு ரூ 25,000. 

ADVERTISEMENT

இதுகுறித்து சூரம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT