தற்போதைய செய்திகள்

தில்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய ஒருவருக்கு கரோனா அறிகுறி

1st Apr 2020 10:35 AM

ADVERTISEMENT


சென்னை: தில்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. 

தில்லியில் அண்மையில் நடைபெற்ற மதபோதனைக் கூட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு கரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்ததையடுத்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பட்டியலை தமிழக உளவுத்துறை தயாரித்து வருகிறது. மேலும், தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய வேண்டுமென மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனையில் தாமாக முன்வந்து சிகிச்சைக்கு சேர்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில் தில்லியியில் நடைபெற்ற மதபோதனைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய ஹைதராபாத்தை சேர்ந்த சென்னை திரும்பிய ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

சென்னை அடையாறில் உள்ள சகோதரர் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Tags : Corona sign
ADVERTISEMENT
ADVERTISEMENT