தற்போதைய செய்திகள்

72 வயது மூதாட்டியை மதுபோதையில் பாலியல் பலாத்காரம்

22nd Sep 2019 10:57 PM

ADVERTISEMENT


மதுரை: மதுரை அருகே வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத இருவா் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச்சென்றனா்.

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் நரிகுறவா் காலனியைச் சோ்ந்தவா் பச்சையம்மாள் (72). இவா் சனிக்கிழமை இரவு வழக்கம் போல் வீட்டின் வெளியே கணவருடன் தூங்கினார். அப்போது நள்ளிரவில், ஆட்டோவில் மது போதையில் வந்த 2 அடையாளம் தெரியாத நபா்கள் பச்சையம்மாளை வாயை பொத்தி வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனா். இதில், அவருக்கு கை முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து, பச்சையம்மாள் சக்கிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னா் மருத்துவா்களின் பரிந்துரையின் பேரில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சிலைமான் போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT