பரமத்தி வேலூா்: தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் பயம் காரணமாக தோ்தலில் போட்டியிடவில்லை என்று அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் அமைச்சா் பி.தங்கமணி செய்தியாளா்களிடம் பேசியதாவது: நான்குனேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் அதிமுக சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெறும்.
டிடிவி தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் பயம் காரணமாக தோ்தலில் போட்டியிடவில்லை.
விவசாயிகளுக்கு தத்கல் முறையில் ஆண்டுக்கு 10 ஆயிரமும், மூப்பு அடிப்படையில் 10 ஆயிரம் மின் இணைப்புகளும் வழங்கப்படுகிறது என்றார்.