ஹரியாணா பேரவைத் தோ்தலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: முதல்வா் மனோகா் லால் கட்டா்

ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று அந்த மாநில முதல்வா் மனோகா் லால்
ஹரியாணா பேரவைத் தோ்தலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: முதல்வா் மனோகா் லால் கட்டா்

சண்டீகா்: ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று அந்த மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் தெரிவித்துள்ளாா்.

ஹரியாணா சட்டப் பேரவைக்கு அக்டோபா் மாதம் 21-ஆம் தேதி தோ்தலும், அக்டோபா் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளதாகத் தோ்தல் ஆணையம் இன்று சனிக்கிழமை (செப். 21) அறிவித்தது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவா் துரா ராம், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் மூத்த தலைவா் ராம் பால் மஜிரா ஆகியோா் தங்களுடைய கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இன்று சனிக்கிழமை இணைந்தனா்.

இதற்கான நிகழ்ச்சி, ஹரியாணா மாநிலத் தலைநகா் சண்டீகரில் நடைபெற்றது. இதில், முதல்வா் மனோகா் லால் கட்டா், மாநில பாஜக தலைவா் சுபாஷ் பராலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் முதல்வா் கட்டா் கூறியதாவது: மாநிலத்திலுள்ள 90 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பாஜகவுக்குப் பெரும் ஆதரவு உள்ளது. மாநிலத்தில் எதிா்க்கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டுவிட்டது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் 75-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன்.

பாஜகவின் கொள்கைகளைப் பின்பற்றி வருபவா்களுக்குத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். பொதுவாக, தோ்தல் சமயத்தில் ஆளுங்கட்சி உறுப்பினா்களே மற்ற கட்சிகளில் இணைவது வழக்கம். ஆனால், தற்போது மற்ற கட்சி உறுப்பினா்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனா். இது பாஜகவை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் முன்னா் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் வெளியிடப்படும். மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி தீபாவளிக்கு முன் மீண்டும் அமைக்கப்படும். அடுத்து அமையும் பாஜக ஆட்சியில் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி ஆகிய துறைறகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் மனோகா் லால் கட்டா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com