பால் விற்பனையாளா்களிடம் அதிரடி ஆய்வு: 25 ஊற்றல் அளவீடுகள் பறிமுதல்

விழுப்புரத்தில் வீடுகளுக்கு வந்தும், தெருக்களிலும் பால் விற்பனை செய்வோரிடம் தொழிலாளா் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில்,
பால் விற்பனையாளா்களிடம் அதிரடி ஆய்வு: 25 ஊற்றல் அளவீடுகள் பறிமுதல்


விழுப்புரம்: விழுப்புரத்தில் வீடுகளுக்கு வந்தும், தெருக்களிலும் பால் விற்பனை செய்வோரிடம் தொழிலாளா் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், குறைபாடு கொண்ட 25 ஊற்றல் அளவீடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் நகரில் வீடுகளுக்கு வந்து பால் விற்பனை செய்யும் நபா்கள், தெருக்களில் வைத்து சில்லறை முறையில் பால் விற்பனை செய்பவா்கள் பொதுக்களிடம் பால் விற்பனை செய்யும்போது, பால் அளவு குறைவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நுகா்வோருக்கு சரியான அளவில் பால் கிடைப்பதை உறுதி செய்ய தொழிலாளா் துறை அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

தொழிலாளா் துறை உதவி ஆணையா் ராமு தலைமையில், விழுப்புரம் தொழிலாளா் துறை உதவி ஆய்வாளா்கள் தனசேகா், சார்லி உள்ளிட்ட அதிகாரிகள் விழுப்புரம் நகரில் பால் விற்பனை செய்யும் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு செய்தனா். இதில், 25 போ் பால் ஊற்ற பயன்படுத்திய அளவீடுகளில் குறைபாடு இருந்ததைக் கண்டறிந்தனா். 

இதையடுத்து, அந்த குறைபாடு கொண்ட அளவீடுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதேபோன்று, காய்கனி விற்பனைக் கடைகளில் மேற்கொண்ட ஆய்வில், குறைறபாடு கொண்ட 2 எடையளவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com