கொசஸ்தலை ஆற்றில் மக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம்: ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவு

வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ வேண்டாம் என
கொசஸ்தலை ஆற்றில் மக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம்: ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவு


திருவள்ளூர்: வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார். 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் உருவாகும் கொசஸ்தலை ஆறு வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது. அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களின் பாசன வசதிக்கு கொசஸ்தலை ஆறுதான் நீர் ஆதாரமாகும்.

அதோடு தாமரைப்பாக்கம் ஏரி, வல்லூர் ஏரி, வெளியகரம் ஏரி, பூண்டி ஏரி ஆகியவற்றுக்கும் கொசஸ்தலை ஆறு நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. மேலும், இந்த ஆற்று வழித்தட கரையோரங்களில் உள்ள கிராம மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. அதையடுத்து சென்னை எண்ணூர் வரையில் சென்று வங்கக் கடலில் கலக்கிறது.

இந்நிலையில், நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் மக்கள் இறங்க வேண்டாம். மக்கள் ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ, வேடிக்கை பார்க்கவோ வேண்டாம் என ஆட்சியர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com