தேஜஸ் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'தேஜஸ்' போர் விமானத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று
தேஜஸ் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!


பெங்களூரு: முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'தேஜஸ்' போர் விமானத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (செப்.19) பயணித்தார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள அரசு பொதுத்துறை நிறுவனமான ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (எச்ஏஎல்) முற்றிலும் உள்நாட்டிலேயே, தேஜஸ் ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. இந்திய விமானப் படை, ஏற்கெனவே, 40 தேஜஸ் ரக விமானங்களை வாங்குவதற்கு, 'ஆர்டர்' கொடுத்துள்ளது. சமீபத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, மேலும், 80 விமானங்களை வாங்கவும், ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடற்படை பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட, தேஜஸ் விமானத்தை, வெற்றிகரமாக தரையிறக்கும் சோதனை முயற்சி, சமீபத்தில் கோவாவில் நடைபெற்றது. இந்த விமானம் மணிக்கு 2,005 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. மிக் -21 ரக விமானங்களுக்கு மாற்றாக இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் வெற்றி கிடைத்ததை அடுத்து, தேஜஸ் போர் விமானத்தில் பயணிப்பதற்காக தில்லியில் இருந்து பெங்களூரு வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பெங்களூரில் உள்ள எச்ஏஎல் விமான நிலையத்தில் இருந்து தேஜஸ் போர் விமானத்தில் பயணிப்பதற்கான உடைகளை அணிந்துகொண்டு தயார் ஆனார். 

பின்னர் தேஜஸ் விமானத்தில் ஏறிய ராஜ்நாத் சிங் சுற்றியிருந்தவர்களை பார்த்து கைகளை அசைத்து பின்னர் விமானத்தில் பயணித்தார். தேஜஸ் போர் விமானத்தில் அவருடன் விமான படை துணைத் தளபதி என். திவாரியும் சென்றார்.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தேஜஸ் விமானத்தில் 30 நிமிடம் பயணித்தார். இதன்மூலம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானத்தில் பயணித்த நாட்டின் முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையை ராஜ்நாத் சிங் பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com