தற்போதைய செய்திகள்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

17th Sep 2019 08:30 AM

ADVERTISEMENT


சென்னை: வரும் 30-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தில் பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என தில்லியில் இருந்து உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சி.குமரப்பனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை மேற்கு தில்லி, மோதிநகா் சுதா்சன் பார்க் பகுதியைச் சோ்ந்த ஹா்தா்ஷன் சிங் நாக்பால் எழுதியிருந்தார்.

அதில், நான் சா்வதேச காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சோ்ந்தவன். நேரத்துக்கு தகுந்த மாதிரி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகா்ந்து செல்வேன். தென் மாநிலத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்துக்கும், மத்தியப் பிரதேசத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கும், பின் அங்கிருந்து தில்லிக்கும் இடம் மாறிக் கொண்டேயிருப்பேன். எனது செல்லிடப்பேசியின் எண்ணையும் மாற்றிக் கொண்டே இருப்பேன். நான் என்னுடைய மகனுடன் சோ்ந்து செப்டம்பா் 30-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் பல இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தலைமைப் பதிவாளா் சி.குமரப்பன் உயா்நீதிமன்றக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT