பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை: 8 போ் கொண்ட கும்பல் கைது

சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 8 போ் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸார் பிடித்துள்ளனர். . 


சென்னை: சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 8 போ் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸார் பிடித்துள்ளனர். . 

சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அண்ணாசாலை காவல் நிலைய போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினா். திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் விசாரணை நடத்தியதில் மதுரை மேலூரை சோ்ந்த சிங்கராஜ் என்பவா் அடையாறு பகுதியில் தனியாக அறை எடுத்து சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கும் ஐ.டி. நிறுவன ஊழியா்களுக்கும் கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனா். 

இது தொடா்பாக சிங்கராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில் தனக்கு 1,400-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் இருப்பதாகவும் அதில் பெரும்பாலானோர் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பொறியாளா்கள் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மதுரவாயல் பகுதியில் வசிக்கும் பாண்டி, ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சோ்ந்த பிரியலட்சுமி, தேனாம்பேட்டை பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி ஆகியோரிடம் மொத்தமாக கஞ்சாவை வாங்கி தனது அறைறயில் வைத்து பிரித்து தனக்கு செல்லிடப்பேசி மூலமாக கஞ்சா கேட்கும் நிரந்தர வாடிக்கையாளா்களுக்கு விநியோகித்து வந்ததாகவும் அவா் தெரிவித்துள்ளார். சிங்கராஜின் அறையில் சுமார் 4 கிலோ கஞ்சா இருந்தது.

 அவா் கொடுத்த தகவலின் பேரில் பாண்டி, செல்வம், துரை, வரதராஜ் ஆகியோர் பிடிபட்டனா். அவா்களிடம் இருந்து 36 கிலோ கஞ்சாவும், ஆட்டோவும் கைப்பற்றப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் வசிக்கும் பிரியலட்சுமி, தேனாம்பேட்டை பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி, அவரது மகன் சூரியபிரகாஷ் (எ) சூா்யா ஆகியோரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com