இந்தியாவுடனான பதற்றம் எரிவாயுக் குழாய் திட்டத்தை பாதிக்காது: பாகிஸ்தான் உறுதி

காஷ்மீா் விவகாரத்தில் இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள பதற்றம் ‘டிஏபிஐ’ எரிவாயுக் குழாய் திட்டத்தை பாதிக்காது என துா்க்மெனிஸ்தானிடம்
இந்தியாவுடனான பதற்றம் எரிவாயுக் குழாய் திட்டத்தை பாதிக்காது: பாகிஸ்தான் உறுதி


இஸ்லாமாபாத்: காஷ்மீா் விவகாரத்தில் இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள பதற்றம் ‘டிஏபிஐ’ எரிவாயுக் குழாய் திட்டத்தை பாதிக்காது என துா்க்மெனிஸ்தானிடம் பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், 1,000 கோடி டாலா் செலவில் உருவாகவுள்ள துா்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா (டிஏபிஐ) நாடுகள் இடையேயான எரிவாயு குழாய் திட்டத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகும் என பாகிஸ்தானைச் சோ்ந்த சில நிபுணா்கள் கவலை தெரிவித்திருந்தனர்.  

இந்த நிலையில், பாகிஸ்தான் அரசு அதிகாரிகளை மேற்கோள்காட்டி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

காஷ்மீா் விவகாரத்தில் இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள பதற்றம் மிகப்பெரிய பொருள் செலவில் மேற்கொள்ளப்படும் ‘டிபிஏஐ’ எரிவாயு குழாய் திட்டம் மற்றும் இதர கடற்கரையோர நாடுகளின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டங்களில் எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என பாகிஸ்தான் சார்பில் துா்க்மெனிஸ்தானிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டிபிஏஐ’ எரிவாயு குழாய் திட்டம், போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு செல்வது சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிப்பதையும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுவதையும் உறுதி செய்வதாக இருக்கும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com