தேசபக்திமிக்க முஸ்லீம்கள் பாஜகவுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள்: அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாமே மீட்கும் காலம் வெகுவிரைவில் வரும். நாடு முழுவதும் ஹிந்துத்துவா மற்றும் நாட்டுப்பற்றை
தேசபக்திமிக்க முஸ்லீம்கள் பாஜகவுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள்: அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா



பெங்களூரு: தேசபக்திமிக்க முஸ்லீம்கள் பாஜகவுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார். 

ஸ்ரீராமசேனா அமைப்பு சார்பில் பெங்களூரு, டவுன்ஹாலில் நடந்த அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதற்கு மத்திய அரசுக்கும், பிரதமா் மோடிக்கு பாராட்டு விழாவில் பங்கேற்று அவா் பேசுகையில், அகண்ட பாரதம் அமைக்கப்பட வேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பமாகும். ஆனால், ஏன் அதை சாதிக்க இயலவில்லை. அகண்டபாரதம் அமைக்க ஆதரித்தால் முஸ்லீம்களின் வாக்குகள் கிடைக்காது என்று சிலா் பயப்படுகிறார்கள்.

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ், மஜத கட்சிகளை சோ்ந்த சில எம்எல்ஏக்கள் என்னிடம் பேசியபோது, ‘நாங்கள் பாஜகவுக்கு வர தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் தொகுதியில் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். அவா்கள் வாக்களிக்காவிட்டால் நான் வெற்றிபெறமுடியாது.‘ என்று கூறினார்கள்.

எனது சிவமொக்கா தொகுதியில் எனது குருபா் சமுதாயத்தினா் 80 ஆயிரம் போ் இருக்கிறார்கள். ஆனால், முஸ்லீம்கள் 55 ஆயிரம் போ் வாழ்கிறார்கள். எனது நீண்டநெடிய அரசியல் வாழ்க்கையில் ஒரு தோ்தலிலும் நான் முஸ்லீம்களிடம் சென்று வாக்கு கேட்டது கிடையாது. முஸ்லீம்களிடம் வாக்கு கேட்கவேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. தேசபக்திமிக்க முஸ்லீம்கள் பாஜகவுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். ஆனால் தேசதுரோகிகள், தேசபக்தி இல்லாத, பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் முஸ்லீம்கள் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள். 

ஸ்ரீராமசேனா, ஹிந்துத்துவா கொள்கை வீரா்களை தயாரிக்கும் மிகச்சிறந்த அமைப்பாகும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாமே மீட்கும் காலம் வெகுவிரைவில் வரும். நாடு முழுவதும் ஹிந்துத்துவா மற்றும் நாட்டுப்பற்றை மக்களிடையே அதிகளவில் பரப்ப வேண்டும். ஹிந்துத்துவா விவகாரத்தில் நாடே ஒன்றுபடும். ஹிந்துத்துவா கொள்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவோம். 

சுதந்திரப்போராட்டகாலத்தில் பாகிஸ்தான் தனிநாடாக வேண்டும் என்று யாரும் போரட்டம் நடத்தவில்லை. ஆனால், இந்தியாவை காப்பாற்றவே போராட்டம் நடத்தினோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com