வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

வெள்ளை மனதுடன் இருந்தால் முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்

DIN | Published: 11th September 2019 11:51 AM


வெள்ளை மனதுடன்தான் எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெள்ளை அறிக்கை கேட்கின்றன என்றும், வெள்ளை மனது இருந்தால் முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமமுக துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

உலகத் தமிழர்களின் நன்மதிப்பை முதல்வர் பெற்றதை எதிர்க்கட்சித் தலைவரால் பொறுக்க முடியவில்லை என்றும், வெள்ளை அறிக்கை கேட்டவர்கள் முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என்று மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அமமுக துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெள்ளை மனதுடன்தான் வெள்ளை அறிக்கை கேட்கின்றன. வெள்ளை மனதுடன் இருந்தால் முதலீடு குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : வெள்ளை மனது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் டிடிவி தினகரன் அமமுக துணைபொதுச் செயலாளர் வெள்ளை அறிக்கை

More from the section

திருப்பதியில் செப்.30 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்
கொசஸ்தலை ஆற்றில் மக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம்: ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவு
ரயில்வே தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்
திருவள்ளூரில் அதிகபட்சமாக 22 செ.மீ. மழை பதிவு: சென்னை வானிலை ஆய்வு மையம்
திருப்பரங்குன்றத்தில் செப்.27-ல் வேல் எடுக்கும் விழா