தற்போதைய செய்திகள்

ரூ.34.30 கோடி செலவில் நாகை நம்பியார் நகரில் மீன்பிடித் துறைமுகம்: தமிழக அரசு

4th Sep 2019 09:29 AM

ADVERTISEMENT

 

நாகை நம்பியார் நகரில் ரூ.34.30 கோடி செலவில் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுய தன்னிறைவு திட்டத்தின் கீழ் நம்பியார் நகரில் ரூ.34.30 கோடி செலவில் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படவுள்ளதாகவும், மீனவர்களின் பங்களிப்பாக திட்ட மதிப்பீட்டின் மூன்றில் ஒரு பங்குத் தொகையான ரூ.11.43 கோடி வழங்கப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதன் மூலம் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

Tags : Nagai Nambiar Fisheries Harbor Government of Tamil Nadu நாகை நம்பியார் நகர் மீன்பிடித் துறைமுகம் தமிழக அரசு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT