தற்போதைய செய்திகள்

செப்.6-ம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்!

4th Sep 2019 12:41 PM

ADVERTISEMENT

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 15-வது ஆலோசனைக்கூட்டம் தில்லியில் வரும் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசால் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தில்லியில் நடைபெற்றது. 

இந்நிலையில், காவிரி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 15-வது ஆலோசனைக் கூட்டம் தில்லி ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மத்திய நீர் ஆணையத்தில் வரும் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காவிரி நீர்ப் படுகையில் தற்போதுள்ள மழைப் பொழிவு, வானியல் சூழல் ஆகியவை மீளாய்வு செய்யப்படும் என்றும், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளின் உயரதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

Tags : நவீன்குமார் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு cauvery disciplinary committee 15th meeting on september 6th
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT