தற்போதைய செய்திகள்

அன்னை-தந்தைக்கு அடுத்த நிலையில் ஆசிரியர்கள்: அன்புமணி ஆசிரியர் தின வாழ்த்து!

4th Sep 2019 12:09 PM

ADVERTISEMENT


சென்னை: வணங்குவதற்கான வரிசையில் அன்னை -தந்தைக்கு அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாமக இளைஞர் அணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள் தான். விவசாயிகள் முதல் பொறியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், அறிவியலாளர்கள் வரை அனைவரையும் உருவாக்கித் தருபவர்கள் ஆசிரியர்கள் தான். மாபெரும் வல்லுனர்களை உருவாக்கித் தருபவர்களாக இருந்தாலும் ஆசிரியர்கள் கடைசி வரை ஆசிரியர்களாகத் தான் இருப்பார்கள். அதனால் தான் அனைவரையும் உயரத்தில் ஏற்றி விட்டு, அதே இடத்தில் இருக்கும் ஏணியுடன் ஆசிரியர்கள் ஒப்பிடப்படுகின்றனர். 

அத்தகைய ஆசிரியர்களுக்கு அரசும், சமுதாயமும் அளித்துள்ள அங்கீகாரம் போதுமானதல்ல. ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் நாளாக கொண்டாடுவதும், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்குவதும்  மட்டும் அவர்களுக்கான அங்கீகாரமாக அமைந்து விடாது. ஆசிரியர்களை மிகவும் மரியாதையாக நடத்துவதுடன், கடந்த காலங்களில் இருந்ததைப் போன்று அதிகாரத்திலும் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். அதேபோல், ஆசிரியர்களும் கல்வியில் மட்டுமின்றி அணுகுமுறையிலும், வாழ்க்கை நெறிகளிலும் சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார். 

Tags : ஆசிரியர் தின வாழ்த்து teachers day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT