தற்போதைய செய்திகள்

நவ.22: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

22nd Nov 2019 07:27 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை (நவ.22) பெட்ரோல் லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனையாகி வருகின்றது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதனிடையே கடந்த நான்கு நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகி வந்த பெட்ரோல், டீசல் விலையில், இன்று பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலை மாற்றமின்றியும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.29 ஆகவும், டீசல் விலையில் தொடர்ந்து நான்காவது நாட்களாக மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.69.59 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT