தற்போதைய செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

12th Nov 2019 01:06 PM | AnandDhanasekaran

ADVERTISEMENT

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் தமிழகத்தின் வடக்கு மற்றும் புதுச்சேரி  உள் மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Tags : tamilnadurain
ADVERTISEMENT
ADVERTISEMENT