ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் லோக் ஜன்சக்தி கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
லோக் ஜன்சக்தி கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள சிரக்ப் பஸ்வான் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் லோக் ஜன்சக்தி கட்சி 50 தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதற்கான முதல் அட்டவணை இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் ஹிந்துஸ்தானி அவாம் மோச்சா கட்சியின் தலைவரும் முன்னாள் பீகார் முதல்வருமான ஜித்தன் ராம் மன்சியும் இத்தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7, டிசம்பர் 12, டிசம்பர் 16, டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டங்களாக நடைபெறவுள்ளது.மேலும் அதற்கான முடிவுகள் டிசம்பர் 23 தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.