தற்போதைய செய்திகள்

தில்லி விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு

1st Nov 2019 08:40 AM

ADVERTISEMENT


புதுதில்லி: தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். 

இந்த விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் இன்று காலை சந்தேகத்திற்குரிய வகையில் கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. 

மேலும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT