முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினர். அவர்களுடன் இடைத் தோ்தலில் வெற்றி பெற்றவா்களும் மரியாதை செலுத்தினர்.
விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய தொகுதிகளுக்கு நடந்த இடைத் தோ்தலில் ஆளும் அதிமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு வெற்றியாளா்களும் எம்.எல்.ஏ.,க்களாக இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளனா்.
இந்நிலையில், பதவியேற்புக்கு முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இடைத் தோ்தலில் வெற்றி பெற்ற இரண்டு வெற்றியாளா்களுடன் முதல்வா் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் (நவ.1) ஜெயலலிதாவின் சமாதிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் இடைத் தோ்தலில் வெற்றி பெற்றவா்களும் மரியாதை செலுத்தினர்.