மக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் திமுக 37 தொகுதிகளில் முன்னிலை!  

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 18 ஆம் தேதி 18
மக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் திமுக 37 தொகுதிகளில் முன்னிலை!  


தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 18 ஆம் தேதி 18 தொகுதிக்கும், மே 19 ஆம் தேதி 4 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. 

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, இடைத்தேர்லில் திமுக கூட்டணி 12 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 10 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 

1. திருவள்ளூர்  - ஜெயக்குமார் காங்கிரஸ் (திமுக கூட்டணி) 2,27,533 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

2. வட சென்னை - கலாநிதி வீராசாமி (திமுக) 1,80,548 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

3. தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) 1,62,068 வாக்குகள் பெற்று முன்னிலை வகுத்து வருகிறார்.

4. மத்திய சென்னை - தயாநிதி மாறன் (திமுக) 2,15,252 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

5. ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு (திமுக) 12,08,814 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

6. காஞ்சிபுரம் - செல்வம் (திமுக),4,05,620 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

7. அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் (திமுக) 4-வது சுற்று முடிவில் 2,47,742 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

8. கிருஷ்ணகிரி செல்லக்குமார் (காங்கிரஸ் திமுக கூட்டணி) 3,18,049 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

9. தர்மபுரி - செந்தில்குமார் (திமுக) 1,75,708 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

10. திருவண்ணாமலை - அண்ணாதுரை (திமுக) 4வது சுற்றின்படி 4,31,313 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

11. ஆரணி - விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ், திமுக கூட்டணி) 6வது சுற்றின்படி 3,97,561 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

12. விழுப்புரம் - ரவிக்குமார் (விசிக, திமுக கூட்டணி) 2,66,489 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். 

13. கள்ளக்குறிச்சி - பொன்.கவுதம் சிகாமணி (திமுக) 3,95,453 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

14. சேலம் - எஸ்.ஆர்.பார்த்திபன் (திமுக) 1,83364 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

15. நாமக்கல் - சின்ராஜ் (கொமதேக, திமுக) 3,28,038 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

16. ஈரோடு - கணேசமூர்த்தி (மதிமுக, திமுக கூட்டணி) 3,72,710 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

17. திருப்பூர் - சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட், திமுக கூட்டணி) 2,55.729 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

18. நீலகிரி - ஆ.ராசா (திமுக) இதுவரை 4,92,578 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

19. கோவை - பி.ஆர், நடராஜன் (மார்க்சிஸ்ட் (திமுக கூட்டணி) 2,04,379 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகிறார்.

20. பொள்ளாச்சி - சண்முகசுந்தரம் (திமுக) 3,13,679 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

21. திண்டுக்கல் - வேலுச்சாமி (திமுக) 1,45,042 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.  

22. கரூர் - ஜோதிமணி (காங்கிரஸ், திமுக கூட்டணி) 2,61,895 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

23. திருச்சி - திருநாவுக்கரசர் (காங்கிரஸ், திமுக கூட்டணி) 7-வது சுற்றின்படி இதுவரை பெற்றுள்ள வாக்குகள் 1,47,096 முன்னிலை பெற்று வருகிறார்.

24. பெரம்பலூர் - பாரிவேந்தர் (திமுக கூட்டணி) பெற்றுள்ள வாக்குகள் - 4,59,486 பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

25. கடலூர் - ரமேஷ் (திமுக) 2,15,381 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

26. சிதம்பரம் - திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டணி) 1,15,251 வாக்குகள் பெற்று முன்னிலை இருந்து வருகிறார். 

27. மயிலாதுறை - ராமலிங்கம்(திமுக) 6வது சுற்றின் முடிவின்படி 2,12,445 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். 

28. நாகப்பட்டினம் - செல்வாசு (இந்திய கம்யூனிஸ்ட், திமுக கூட்டணி) 2,35,115 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

29. தஞ்சாவூர் - பழனிமாணிக்கம் (திமுக) 2,04.063 வாக்குள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். 

30. சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்( காங்கிரஸ், திமுக கூட்டணி) 1,73,256 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.

31. மதுரை - சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட், திமுக கூட்டணி) 1,17,833 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

32. தேனி - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்( காங்கிரஸ், திமுக கூட்டணி) 82,647 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வகித்து வருகிறார். 1,17,833 வாக்குகள் பெற்று முதலிடம் வகித்து வருகிறார்.

33. விருதுநகர் - மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ், திமுக கூட்டணி) 3,07,170 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

34. ராமநாதபுரம் - நவாஸ்கனி (திமுக கூட்டணி) 82,415 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகிறார்.

35. தூத்துக்குடி - கனிமொழி (திமுக) 2,36,032 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

36. தென்காசி - தனுஷ் எம்.குமார் (திமுக) 6-வது சுற்றின்படி 3,13,481 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

37. திருநெல்வேலி - ஞானதிரவியம் (திமுக) 3,43,065 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

38. கன்னியாகுமரி - எச்.வசந்தகுமார் (திமுக கூட்டணி) 2,39,068 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

39. புதுச்சேரி - வைத்திலிங்கம் (காங்கிரஸ்) 1,84,668 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். 

தற்போதைய நிலவரப்படி தர்மபுரி தொகுதியில் முன்னிலையில் இருந்து வந்த பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பின்னிலையில் இருந்து வருகிறார்.

இதையடுத்து தமிழகத்தின் 38 மக்களவைத் தொகுதியில் 37 திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.  

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். தேசியளவில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு இதுதான் தமிழக மக்களின் தந்த முடிவாக உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com