மக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் முன்னிலை வகிக்கும் திமுக வேட்பாளர் விவரம்!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 18 ஆம் தேதி 18
மக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் முன்னிலை வகிக்கும் திமுக வேட்பாளர் விவரம்!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 18 ஆம் தேதி 18 தொகுதிக்கும், மே 19 ஆம் தேதி 4 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. 

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, இடைத்தேர்லில் திமுக கூட்டணி 12 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 10 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 

1. திருவள்ளூர்  - ஜெயக்குமார் காங்கிரஸ் (திமுக கூட்டணி)
2. வட சென்னை - கலாநிதி வீராசாமி (திமுக)
3. தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) 
4. மத்திய சென்னை - தயாநிதி மாறன் (திமுக)
5. ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு (திமுக) 
6. காஞ்சிபுரம் - செல்வம் (திமுக),
7. அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் (திமுக) 
8. கிருஷ்ணகிரி செல்லக்குமார் (காங்கிரஸ் திமுக கூட்டணி) 
9. தர்மபுரி - செந்தில்குமார் (திமுக)
10. திருவண்ணாமலை - அண்ணாதுரை (திமுக) 

11. ஆரணி - விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ், திமுக கூட்டணி)
12. விழுப்புரம் - ரவிக்குமார் (விசிக, திமுக கூட்டணி)
13. கள்ளக்குறிச்சி - பொன்.கவுதம் சிகாமணி (திமுக) 
14. சேலம் - எஸ்.ஆர்.பார்த்திபன் (திமுக) 
15. நாமக்கல் - சின்ராஜ் (திமுக)
16. ஈரோடு - கணேசமூர்த்தி (மதிமுக, திமுக கூட்டணி)
17. திருப்பூர் - சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட், திமுக கூட்டணி)
18. நீலகிரி - ஆ.ராசா (திமுக)
19. கோவை - பி.ஆர், நடராஜன் (மார்க்சிஸ்ட் (திமுக கூட்டணி)
20. பொள்ளாச்சி - சண்முகசுந்தரம் (திமுக)

21. திண்டுக்கல் - வேலுச்சாமி (திமுக)
22. கரூர் - ஜோதிமணி (காங்கிரஸ், திமுக கூட்டணி)
23. திருச்சி - திருநாவுக்கரசர் (காங்கிரஸ், திமுக கூட்டணி)
24. பெரம்பலூர் - பாரிவேந்தர் (திமுக கூட்டணி)
25. கடலூர் - ரமேஷ் (திமுக)
26. சிதம்பரம் - திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டணி)
27. மயிலாதுறை - ராமலிங்கம்(திமுக)
28. நாகப்பட்டினம் - செல்வாசு (இந்திய கம்யூனிஸ்ட், திமுக கூட்டணி)
29. தஞ்சாவூர் - பழனிமாணிக்கம் (திமுக)
30. சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்( காங்கிரஸ், திமுக கூட்டணி) 

31. மதுரை - சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட், திமுக கூட்டணி)
32. தேனி - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்( காங்கிரஸ், திமுக கூட்டணி) 
33. விருதுநகர் - மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ், திமுக கூட்டணி)
34. ராமநாதபுரம் - நவாஸ்கனி (திமுக கூட்டணி)
35. தூத்துக்குடி - கனிமொழி (திமுக) 
36. தென்காசி - தனுஷ் எம்.குமார் (திமுக) 
37. திருநெல்வேலி - ஞானதிரவியம் (திமுக) 
38. கன்னியாகுமரி - எச்.வசந்தகுமார் (திமுக கூட்டணி) 
39. புதுச்சேரி - வைத்திலிங்கம் (காங்கிரஸ்) 

தற்போதைய நிலவரப்படி தர்மபுரஹி தொகுதியில் முன்னிலையில் இருந்து வந்த பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பின்னிலையில் இருந்து வருகிறார்.

இதையடுத்து தமிழகத்தின் 38 மக்களவைத் தொகுதியில் 38 திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com