தமிழக சட்டபேரவை இடைத்தேர்தல்: அதிமுக 12; திமுக 10 தொகுதிகளில் முன்னிலை 

தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 12 தொகுதிகளிலும், திமுக 10 தொகுதிகளிலும் தற்போது முன்னிலை வகித்து வருகின்றனர். 
தமிழக சட்டபேரவை இடைத்தேர்தல்: அதிமுக 12; திமுக 10 தொகுதிகளில் முன்னிலை 

தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 12 தொகுதிகளிலும், திமுக 10 தொகுதிகளிலும் தற்போது முன்னிலை வகித்து வருகின்றனர். 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 18 ஆம் தேதி 18 தொகுதிக்கும், மே 19 ஆம் தேதி 4 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. 

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, இடைத்தேர்லில் திமுக கூட்டணி 12 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 10 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 

இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்: 
தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம் 36,792 வாக்குகள் பெற்று முன்னிலை வகுகின்றார்.

அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் 6-வது சுற்று முடிவில் திமுகவின் வேட்பாளர் செந்தில் பாலாஜி 5,589 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.

மானாமதுரை(தனி) தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் 7-வது சுற்றில் தொடர்ந்து அதிமுக வேட்பாளர்  நாராஜன் 3801 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

சூலூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் 5-வது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் கந்தசாமி 2,452  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 

பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் 3-வது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி 5,136 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்.

விளத்திக்குளம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் 7-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் 10,396 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வருகின்றார்.

பூந்தமல்லி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் 3-வது சுற்றின் முடிவிலும் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றார்.

சாத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் 6-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 2,881 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் 4-வது சுற்று முடிவில் திமுக 15,332 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 

குடியாத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மூர்த்தி 4,315 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கின்றார்.

திருவாரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பூண்டி கே. கலைவாணன் 50902 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றார்.

சோளிங்கர் தொகுதியில் திமுக வேட்பாளர் 1,757 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com