அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி முன்னிலை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி தொடர்ந்து முன்னிலை வகித்து
அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி முன்னிலை

  
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 

அரவக்குறிச்சி தொகுதிக்கு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் செந்தில்நாதன், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமமுக சார்பில் சாகுல் அமீது, நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம், மக்கள்நீதி மய்யம் கட்சி சார்பில் மோகன் ராஜ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 63 பேர் களத்தில் இருந்தனர். 1 லட்சத்து 73 ஆயிரத்து 115 பேர் தங்களது வாக்கை பதிவு செய்தனர். அதாவது 84.33 சதவீதம் பதிவாகி இருந்தது. 

பதிவான வாக்கு பெட்டிகள் கரூர் தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பலத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கி முன்னிலை நிலவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முதல் சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம்:
செந்தில்பாலாஜி (திமுக)  - 5,102
செந்தில்நாதன் (அ.திமுக) - 3,911
சாகுல் அமீது (அமமுக) - 347
செல்வம் (நாம் தமிழர்) - 91
மோகன்ராஜ் (மக்கள் நீதி மய்யம்) - 57
முதல் சுற்று முடிவின் படி 1,191 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி முன்னிலையில் இருந்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com