வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பு பணியில் 5000 போலீஸார்: ஏ.கே. விஸ்வநாதன்

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது சென்னையில் 5000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை
வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பு பணியில் 5000 போலீஸார்: ஏ.கே. விஸ்வநாதன்


மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது சென்னையில் 5000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

17-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாகவும், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த 19-ஆம் தேதியன்று நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. 

இந்தத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. 

சென்னையில், வடசென்னை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்கள் ராணிமேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. 

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு பெட்டிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்படுள்ளது. 

இதனிடையே நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், மூன்று வாக்கு எண்ணும் மையங்கள் உட்பட முக்கிய இடங்களில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com