பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் அச்சம்

மக்களவைத் தேர்தல் முன்னிட்டு எரிவாயு பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், பெரிதாக மாற்றம் எதுவும் நிகழாமல் சிறிய ஏற்ற
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் அச்சம்


மக்களவைத் தேர்தல் முன்னிட்டு எரிவாயு பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், பெரிதாக மாற்றம் எதுவும் நிகழாமல் சிறிய ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தநிலையில், தேர்தல் முடிந்த அடுத்த தினமான இன்றே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது அனைத்து தரப்பினரையும் அச்சமடைய வைத்துள்ளது. 

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.73.82 ஆகவும், டீசல் லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ரூ.69.88 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மக்களவைத் தேர்தலையொட்டி சில தினங்கள் குறைந்தும் மாற்றமின்றியும் விற்பனையாகி வந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் முடிவடைந்த அடுத்த தினமான இன்றே முறையே லிட்டருக்கு 10 காசுகள், 16 காசுகள் என அதிகரித்துள்ளது வாகன ஓட்டிகள், விவசாயிகள், வணிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடையே மிகுந்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com