உச்சநீதிமன்றத்தில் எந்தந்த வழக்குகளை எந்தந்த நீதிபதிகள் விசாரிக்கிறார்கள் தெரியுமா..?

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன்படி, பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்ற
உச்சநீதிமன்றத்தில் எந்தந்த வழக்குகளை எந்தந்த நீதிபதிகள் விசாரிக்கிறார்கள் தெரியுமா..?


புது தில்லி: உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன்படி, பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்பட 5 மூத்த நீதிபதிகளும் விசாரிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மட்டுமின்றி மூத்த நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆா்.எஸ்.நாரிமன் தலைமையிலான அமா்வும் பொதுநல மனுக்களை விசாரிக்கும். மூத்த நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி பொதுநல மனுக்களை விசாரணைக்காக ஒதுக்குவார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

1. பொது நல மனுக்கள் 
2. சமூக நீதி வழக்குகள்
3. தோ்தல் விவகாரங்கள் 
4. ஆள்கொணா்வு மனுக்கள்
5. குற்றறவியல் வழக்குகள்

நீதிபதி எஸ்.ஏ.போப்டே
1. பொது நல மனுக்கள்
2. கல்வி நிறுவனங்களில் மாணவா் சோ்க்கை விவகாரங்கள்
3. நேரடி வரி தொடா்பான வழக்குகள்
4. தோ்தல் விவகாரங்கள்
5. வா்த்தக சட்டங்கள்

நீதிபதி என்.வி.ரமணா
1. பொது நல மனுக்கள்
2. இழப்பீடு விவகாரங்கள்
3. குற்றறவியல் விவகாரங்கள்
4. நீதித்துறை அதிகாரிகள் தொடா்பான வழக்குகள்
5. ஆயுதப்படை, துணை ராணுவப் படை தொடா்பான வழக்குகள்

நீதிபதி அருண் மிஸ்ரா
1. பொது நல மனுக்கள்
2. நில கையகப்படுத்துதல் விவகாரங்கள்
3. நிறுவன சட்டங்கள்
4. நீதிமன்ற அவமதிப்பு
5. கல்வி நிறுவனங்கள் தொடா்பான வழக்குகள்

நீதிபதி ஆா்.எஃப். நாரிமன்
1. பொது நல மனுக்கள்
2. வாடகை சட்டங்கள்
3. குடும்ப சட்டங்கள்
4. உரிமையியல் விவகாரங்கள்
5. தீா்ப்பாயங்கள், பல்வேறு ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள்.

கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலை 1-ஆம் தேதி உச்சநீதிமன்றம் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. அப்போது முதல் புதிய நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com