18 எம்எல்ஏக்கள் இல்லையென்றால் தினகரனே இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி

18 எம்எல்ஏக்கள் இல்லையென்றால் தினகரனே இல்லை. தினகரனை கண்டால் நான் ஏன் பொட்டிப்பாம்பாக அடங்க வேண்டும்? சம்பளம் கொடுத்து
18 எம்எல்ஏக்கள் இல்லையென்றால் தினகரனே இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி


சென்னை: 18 எம்எல்ஏக்கள் இல்லையென்றால் தினகரனே இல்லை. தினகரனை கண்டால் நான் ஏன் பொட்டிப்பாம்பாக அடங்க வேண்டும்? சம்பளம் கொடுத்து கட்சியில் வேலை வாங்குகிறார்களா என்ன? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்புள்ளார் தங்க தமிழ்ச்செல்வன். 

மதுரையில் தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமமுகவில் நிர்வாகம் சரியில்லை, தினகரனுடன் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை. தங்களை சந்திப்பதை யார் என்று வெளியில் சொல்பவர்கள் நல்ல தலைமை இல்லை என கூறினார்.  

மேலும், அமைதியாக, மனநிறைவோடு இருப்பது தான் எனது நிலைப்பாடு. ‘ஒன் மேன் ஆர்மி’யாக டிடிவி தினகரன் செயல்படுவதால் கட்சியில் உள்ளவர்கள் வெளியேறி வருகிறார்கள், மீதம் உள்ளவர்களும் விரைவில் வெளியேறுவார்கள். தினகரன் பண்பாடே மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டிய தங்க தமிழ்செல்வன், தற்போது மன நிறைவோடு இருப்பதாகவும், எந்த கட்சியிலும் சேர நான் விரும்பவில்லை. அதிமுகவில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. யாரும் என்னிடம் பேசவும் இல்லை.

மக்களவைத் தேர்தலில் தோற்றோம். 18 தொகுதிக்கான பேரவை இடைத்தேர்தலில் தோற்றோம். அதன் பின்னர் நடைபெற்ற 4 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதிலும் தோற்றால் என்ன அர்த்தம். அமமுகவை மக்கள் ரசிக்கவில்லை. ஆதரிக்கவில்லை என்றுதானே அர்த்தம்.

தினகரனுடன் ஆரம்பத்தில் இருந்தே கருத்து வேறுபாடு இருந்தது. வீடியோ, ஆடியோ வெளியிடுவது நல்ல பண்பாடு இல்லை. சம்பளம் வாங்கி கொண்டா கட்சியில் இருக்கிறேன்? ஏன் பெட்டிப்பாம்பாக அடங்க வேண்டும்? கொள்கை இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் எதுக்கு? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய தங்க தமிழ்ச்செல்வன், அவரை அதரித்த 18 எம்எம்ஏ.க்கள் வாழ்க்கையை இழந்து நிற்கிறார்கள். அவர்களின் குடும்பம் என்ன நிலைமையில் இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். 18 எம்எல்ஏக்கள் இல்லையென்றால் தினகரனே இல்லை. அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com