தங்க தமிழ்ச்செல்வன் பேசிய வாட்சப் ஆடியோ: தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி தினகரன்! 

டிடிவி தினகரன் அணிக்கு சென்றதால் எம்.எல்.ஏ பதவியை பறிகொடுத்ததோடு, தேனி பாராளுமன்ற தொகுதியில் அமமுக கட்சி சார்பில் போட்டியிட்டு
தங்க தமிழ்ச்செல்வன் பேசிய வாட்சப் ஆடியோ: தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி தினகரன்! 


அமமுகவில் தங்க தமிழ்ச்செல்வனின் பேச்சு புதிய சர்ச்சைய எழுப்பி உள்ள நிலையில் தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன். 

டிடிவி தினகரன் அணிக்கு சென்றதால் எம்.எல்.ஏ பதவியை பறிகொடுத்ததோடு, தேனி பாராளுமன்ற தொகுதியில் அமமுக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரனை ஆபாசமாக விமர்சித்ததாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், டிடிவி தினகரன் மற்றும் கட்சி நிலவரங்கள் குறித்து தங்க தமிழ்ச்செல்வன் பேசிய வாட்சப் ஆடியோ பேச்சால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இன்று காலை 10 மணியளவில் தேனி மாவட்ட நிர்வாகிகளை டிடிவி தினகரன் சந்திக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. 

இதனிடையே, என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com