தங்க தமிழ்ச்செல்வனுக்கு மனநிலை சரியில்லை: வெற்றிவேல் பேச்சு

கட்சி நிலவரங்கள் குறித்தும் தங்க தமிழ்ச்செல்வன் பேசிய வாட்சப் ஆடியோ பேச்சு குறித்தும் இன்று காலை 10 மணியளவில் தேனி மாவட்ட
தங்க தமிழ்ச்செல்வனுக்கு மனநிலை சரியில்லை: வெற்றிவேல் பேச்சு


தங்க தமிழ்ச்செல்வனுக்கு மனநிலை சரியில்லை. அவரை சரியான மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற வேண்டும் என அமமுக வெற்றிவேல் தெரிவித்துள்ளார். 

டிடிவி தினகரன் அணிக்கு சென்றதால் எம்.எல்.ஏ பதவியை பறிகொடுத்ததோடு, மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அமமுக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரனை ஆபாசமாக விமர்சித்ததாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கட்சி நிலவரங்கள் குறித்தும் தங்க தமிழ்ச்செல்வன் பேசிய வாட்சப் ஆடியோ பேச்சு குறித்தும் இன்று காலை 10 மணியளவில் தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து டிடிவி தினகரன் ஆலோசனை நடத்துகிறார். 

இதனிடையே, உண்மையாக தவறு செய்திருந்தால், என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். 

இந்த விவகாரம் குறித்து அமமுவைச் சேர்ந்த வெற்றிவேல் கூறுகையில், அந்த ஆடியோ உண்மைதான். அவருக்கு மனநிலை சரியில்லை. வீட்டிலிருப்பவர்கள் அவரை சரியான மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுவது சிறந்தது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com