தற்போதைய செய்திகள்

பொள்ளாச்சியில் 9 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை

31st Jul 2019 11:21 AM

ADVERTISEMENT

 

பொள்ளாச்சியில் நகைக் கடைகள், அதிமுக பிரமுகர் வீடு, தொழில்அதிபர் வீடு என 9 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டி வருகின்றனர். 

பொள்ளாச்சி கடை வீதியில் 15-க்கும் அதிகமான நகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில நகைக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்காமல், துண்டுக் காகிதத்தில் நகை வாங்கிய தொகை குறித்து எழுதித் தருவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள சின்ன அண்ணன் நகைக் கடை, கணபதி ஜூவல்மார்ட் ஆகிய இரண்டு கடைகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். மாலை வரை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.  

ADVERTISEMENT

அதேபோல மகாலிங்கபுரம், பாரதி வீதியைச் சேர்ந்த தொழில் அதிபர் சசிகுமாரின் வீடு, கல்லூரி, எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். 

பொள்ளாச்சி அதிமுக பிரமுகர் ஈஸ்வரமூர்த்தி வீடு, நெகமத்தை அடுத்த ரங்கம்புதூரில் தென்னை நார் தொழிற்சாலை நடத்திவரும் சின்னசாமி என்பவரது வீடு, மூட்டாம்பாளையம், ஏரிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தென்னைநார் தொழிற்சாலைகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றதாகக் கூறப்படுகிறது. 

பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் 9 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியது இப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT